• Breaking News

    சச்சினிடம் மன்னிப்புக் கேட்ட அவுஸ்திரேலிய நிறுவனம்


    சச்சினிடம்   அவுஸ்திரேலியாவின் ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டதையடுத்து அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது.
    ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் 2016-ல் 14 கோடிக்குச சச்சின் டெண்டுல்கர்    ஒப்பந்தம் செய்தார்.  இந்த ஒப்பந்தம் இரண்டு 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம். இதன்படி சச்சின் புகைப்படங்களை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தலாம்.
    ஆனால்  இரண்டு  ஆண்டுகள் முடிந்த பின்பும் சச்சினுக்கு அளிக்க வேண்டிய ஒப்பந்தத் தொகையை அளிக்காமல் ஸ்பார்ட்டன் இழுத்தடித்து வந்தது.
    இதனையடுத்து சச்சின் தன் படங்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறிய பின்பும் நிறுவனம் புகைப்படங்களை பயன்படுத்தி வந்தது. இதனையடுத்து ஸ்பார்ட்டன் நிறுவனம் ரூ14 கோடி தொகை கேட்டு சச்சின் வழக்குத் தொடர்ந்தார்.
    இந்த வழக்கு சிட்னி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
    இந்நிலையில் ஸ்பார்ட்டன் நிறுவனம் சச்சினிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அதன் தலைமை இயக்குநர் கால்பிரெய்த் கூறுகையில், “ஒப்ப்பந்தங்களின் படி செயல்பட முடியாமல் போனதற்கு ஸ்பார்ட்டன் நிறுவனம் சார்பில் சச்சினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பொறுமையாகச் செயல்பட்ட சச்சினுக்கு நன்றிஎன்றார்.
    இதனையடுத்து வழக்கை முடித்துக் கொள்ள சச்சின் சம்மதித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad