ட்விட்டர் (Twitter) ஊழியர்கள் வீட்டிலிருந்தே இனி வேலை செய்யலாம்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி (Jack Dorsey) தனது ஊழியர்களுக்கு இந்த தொற்றுநோய் காலத்தின் பின்னரும் கூட அவர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
“முழுமையாக வீட்டிலிருந்து வேலை செய்யும் மாதிரி அலுவலக கட்டமைப்பை செயல்படுத்தும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கும். இவ்வாறு இயங்கியபடி மக்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு முதலிடம்
“முழுமையாக வீட்டிலிருந்து வேலை செய்யும் மாதிரி அலுவலக கட்டமைப்பை செயல்படுத்தும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கும். இவ்வாறு இயங்கியபடி மக்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு முதலிடம்
கொடுப்போம்” என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Image Credit - Scott Norsworthy
கொரோனா வைரஸ் அமெரிக்கா முழுவதும் பரவத் தொடங்கியதை அடுத்து, மார்ச் மாத தொடக்கத்தில் ட்விட்டர் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யத் தூண்டியது. மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் உள்ளிட்ட பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த முறையை கைப்பிடித்தன.
அந்த நேரத்தில், ட்விட்டர் மனிதவளத் தலைவர் (Twitter human resources head) ஜெனிபர் கிறிஸ்டி(Jennifer Christie), இனிவரும் காலங்களில் பணியின் கட்டமைப்பு "ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது" என்று கூறியிருந்தார். “முன்பு அலுவலகமல்லாத வேறிடத்திலிருந்து (Remote Work) வேலை செய்யத்
தயங்கியவர்கள், இப்போது அதன் தேவையை உணர்ந்திருப்பார்கள். இவ்வாறான, வெவ்வேறிடங்களில் வேலை செய்பவர்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்க முடியும் என்று நினைக்காத மேலாளர்கள் (Managers) இப்பொது வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். இதுவே இனித்தொடருமென நினைக்கிறேன்” என்று கிறிஸ்டி மேலும் அனுமானித்திருந்தார்.
"விரைவாக பதிலளிப்பதற்கும், வீட்டிலிருந்து வேலை செய்ய (work from home)
எல்லோரையும் அனுமதிப்பதற்கும் நாங்கள் தனித்துவமாக உள்ளோம். பணிப் பரவலாக்கம் (decentralization) மற்றும் எங்கிருந்தும் பணிபுரியும் திறன் கொண்ட
பணியாளர்களை (distributed workforce) ஆதரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று ஒரு ட்விட்டர் செய்தித் தெரிவித்தார்.
”கடந்த சில மாதங்கள் அவர்கள் அந்த வேலையைச் செய்ய முடியும் என்பதை
நிரூபித்துள்ளனர். எனவே, எங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்ய விரும்பினால், நாங்கள் அதை அனுமதிபோம் . இல்லையென்றால், திரும்பி வருவது பாதுகாப்பானது என்று நாங்கள் உணரும்போது, சில கூடுதல் முன்னெச்சரிக்கைகளுடன், எங்கள் அலுவலகங்கள் அவர்களை வரவேற்கத்தக்கவையாக இருக்கும்.” என்று மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை