ஆகஸ்ட் 2019-லேயே கரோனா பரவியுள்ளது செயற்கைக் கோள் ஆய்வில் தகவல்
சீனாவின் வூஹான் நகரின் மருத்துவமனையில் வாகன
நிறுத்துமிடம் பற்றிய
செயற்கைக் கோள் படங்கள், இணையதளத்தில் தேடல்
எந்திரத்தில் தேடப்பட்ட
ட்ரெண்டுகளைப் பார்க்கும்
போது கரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் ஓகஸ்ட மாதமே பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக
அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது என ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வூஹானில் உள்ள ஐந்து மருத்துவமனைகளின் வாகன நிறுத்திமிடங்களில் அதற்கு முந்தைய ஆண்டு ஆகஸ்டை ஒப்பிடும்போது 2019 ஓகஸ்ட்டில் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல் சீனாவின் பைடு தேர்தல் எந்திரத்தில் தொற்று நோய் தொடர்பான திறவுச்சொற்கள் தேடலில் பயன்படுத்தப்பட்டது
ஓகஸ்ட் மாதம் முதலே அதிகமாக இருந்ததாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓகஸ்ட் 2019-ல் அதிகரித்த
கரோனா டிசம்பர் 2019-ல் உச்சம் பெற்றிருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.
வூயானின் மிகப்பெரிய மருத்துவமனையான தியன்யூ மருத்துவமனையில் கார் பார்க்கிங் பகுதியை சாட்டிலைட் இமேஜ் வைத்து ஆராய்ந்த போது 2018 ஓகஸ்டில் 171 கார்கள் கார்பார்க்கிங்கில் இருந்தது தெரியவந்தது. ஆனால் 2019 ஓகஸ்டில் இது 285 கார்களாக அதிகரித்துள்ளது தெரியவந்தது. அதாவது 67% அதிகரித்துள்ளது, மேலும் இதே காலக்கட்டத்தில் வூஹான் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்த கார்களின் எண்ணிக்கை 90% அதிகரித்ததாகத் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் 2019 இடையே வூஹானில் உள்ள 6 மருத்துவமனைகளில் 5இல் ஆய்வுகள் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. பைடு தேடல் எந்திரத்தில் இதே காலக்கட்டத்தில் ’டயரியா’ மற்றும் இருமல் ஆகியவை குறித்த தேடுதல் அதிகம் இடம்பெற்றுள்ளது. இந்தப் புள்ளிகளையெல்லாம் இணைத்து கோலம் போட்டால் சீனாவில் கரோனா பரவியதன் சூட்சமம் புரியவரும் என்கிறது இந்த ஆய்வு.
டயரியா எனும் வயிற்றுப்போக்கு குறித்த தேடல் ஏன் அதிகரித்திருக்கிறது என்றால் வூஹானில்
கரோனா தொற்றியவர்களுக்கு வயிற்றுப் போக்கும் ஒரு நோய் அறிகுறியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது அதிகாரபூர்வமாக கோவிட் என்று அறியப்படுவதற்கு முன்பே சீனாவில் மருத்துவ ரீதியாக ஏகப்பட்டது நிகழ்ந்துள்ளது. தெற்கு சீனாவில் இந்த வைரஸ் தோன்றியுள்ளது, வூஹான் கொத்தாக தொற்றும் நேரத்தில் ஏற்கெனவே கரோனா சுழற்சியில் இருந்துள்ளது என்ற கோட்பாட்டுடன் இந்தக் கண்டுபிடிப்புகள் ஒத்துப் போகின்றன.
என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை