2021 ஆம் ஆண்டு ஒஸ்கர் விழா தள்ளி வைப்பு
உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஒஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஒஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
93 ஆவது ஆஸ்கர் விழா அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி
மாதம் 28 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்ததது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுபெப்ரவரி
மாதம் நடைபெற இருந்த ஒஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒஸ்கர்
வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது இது 4-வது முறையாகும்.,
இதற்கு
முன்னதாக 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட வெள்ளம் 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது,
1981 ஆம் ஆண்டு அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் றீகன் கொல்லப்பட்டது ஆகிய மூன்று
காரணங்களுக்காக
மட்டுமே ஒஸ்கர் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போது வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்கர் விழா தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை