Wednesday, May 14.
  • Breaking News

    நிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20 ஆயிரம் டொலர் தரப்படும் நாஸா

    விண்வெளி தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கத்தோடு பல நாடுகளை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற வசதிகளை விண்வெளியில் அமைப்பது மிகவும் கடினமான பணியாகவே இருந்து வருகிறது. 

    புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களில் உடையுடன் இணைந்தவாறே டைப்பர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிக செலவுகள் ஏற்பட்டு வருகிறது. 

    இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி மையமான நாஸா வரும் 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், விண்வெளி மற்றும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. 

    இந்நிலையில், சந்திரனின் ஈர்ப்புவிசையில், நுண்ணிய ஈர்ப்பு விசையிலும் இயங்கக்கூடிய கழிவறையை வடிவமைத்து தருபவர்களுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும் என நாஸா தெரிவித்துள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad