• Breaking News

    ஜி-7 மாநாட்டுக்கு மோடியை அழைத்த ட்ரம்ப்


    ஜி-7 மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைத்திருந்தார், அதோடு, தென் கொரியா, ரஷ்யாஅவுஸ்திரேலியா ஆகிய நாடுகளையும் அழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது சீனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜி-7 என்பது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் , கனடா ஆகிய நாடுகளைக் கொண்டதாகும், இந்நாட்டின் தலைவர்கள் ஆண்டுக்கொரு முறை கூடி உலகப் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிப்பது வழக்கம்.

    இந்நிலையில் செப்டம்பருக்கு ஜி-7 மாநாட்டை ஒத்தி வைத்த ஜனாதிபதி ட்ரம்ப் ஜி-7 என்பது வழக்கொழிந்த விவகாரமாக உள்ளது எனவே இந்தியா,ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியாவையும் சேர்த்து ஜி-11 என்று மாற்றுவோம் என்று கூறினார்   அமெரிக்காவில் நடைபெறும் ஜி-7 மாநாட்டுக்கு அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தார்.

    இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறும்போது, “அனைத்து சர்வதேச மாநாடுகள் மற்றும் அமைப்புகள் நாடுகளிடையே பரஸ்பரம் நம்பிக்கையையும், பன்னோக்குகளையும் உலக அமைதியையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் சூழலை உருவாக்குவதாக இருக்க வேண்டும். இதுதான் பெரும்பான்மையான நாடுகளின் பங்கு என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.

    இந்நிலையில் சீனாவுக்கு எதிராக ஒரு சிறிய வட்டத்தை நாடுவது என்பது நிச்சயம் தோல்வியில்தான் போய் முடியும். அது வரவேற்பைப் பெற வாய்ப்பில்லைஎன்றார்.
    கரோனா விவகாரம் மற்றும் சிலபல வர்த்தக சண்டை காரணமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு உருவாகியுள்ளது, சீனாவுக்கான சப்ளை சங்கிலிகளை உடைக்க ட்ரம்ப் முயன்று வருகிறார் என்று  சீனா குற்றம்சாட்டியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad