இங்கிலாந்தில் 83 நாட்களுக்குப்பின் கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் மார்ச் மாதம் 23- ஆம் திகதியில் இருந்து அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இன்று முதல் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலையில் கடைகள் திறக்கப்பட்டன.
பேஷன் சில்லறை விற்பனை கடையான பிரிமார்க் தள்ளுபடி
அறிவித்திருந்தது. பர்மிங்காமில்
உள்ள தலைமை கடையில் மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர்.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதால் பாம்பு போன்று வளைந்து நீண்ட வரிசையில் நின்று மக்கள் பொருட்களை வாங்கிச்
சென்றனர்.
ஆனால் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இதுவரை கடைகள் திறக்கப்படவில்லை. வடக்கு அயர்லாந்தில் வெள்ளிக்கிழமையில் இருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை