பற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்
உலகப்புகழ் பெற்ற பற்மான்[ Batman [படங்களை இயக்கிய ஜோயல் ஸ்குமாச்சர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘Batman ‘ படங்களை இயக்கி உலக புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80. ஜோயல் ஸ்குமாச்சர் ‘பேட்மேன் பார் எவர்‘ மற்றும் ‘மேட்மேன் அண்ட் ராபின்‘ ஆகிய படங்களை இயக்கி 1990-களில் முன்னணி இயக்குனராக இருந்தார்.
இளம் நடிகர்களுக்கு படங்களில் வாய்ப்பு அளிப்பதில் முதன்மையானவர் என்ற பெருமையும் ஜோயல் ஸ்குமாச்சருக்கு உண்டு. இவர் 1970-ல் ஹாலிவுட்டில் ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். ஸ்லீப்பர், இண்டீரியர் உள்பட பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். 1985-ல் செண்ட் எல்மோஸ் பயர் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். தொடர்ந்து ஏராளமான படங்களை இயக்கினார். ஜோயல் ஸ்குமாச்சர் மறைவு பேட்மேன் பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கருத்துகள் இல்லை