#BlackLivesMatter : கறுப்பினருக்கு ஆதரவாக களமிறங்கிய ட்விட்டர் , பேஸ்புக்
அமெரிக்கப் பொலிஸால்
கொல்லப்பட்ட 46 வயதான ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலையைக் கண்டித்து அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில், #BlackLivesMatter என்ற ஹேஷ்டேக் இனவெறிக்கு எதிரான கர்ஜனையான முழக்கமாக மாறியுள்ளது.
இப்போது, ட்விட்டர் இந்த இயக்கத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ப்ரொபைல் படத்தையும் மாற்றியுள்ளது.
ட்விட்டர் அதன் பயோவை “#BlackLivesMatter”
என்று மாற்றி, அதன் ப்ரொபைல் படத்தை நீல பறவையிலிருந்து கறுப்பு நிற பறவையாக மாற்றியுள்ளது.
முன்னதாக, ட்விட்டர் டுகெதரில், “இனவெறி சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. தொற்றுநோயைச்
சுற்றியுள்ள ஏற்கனவே வளர்ந்து வரும் அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்த வாரம் மீண்டும் ஒரு பரவலான விஷயத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது: நீண்டகாலமாக இனவெறி மற்றும் கறுப்பு மற்றும் பிரவுன் மக்கள் தினசரி எதிர்கொள்ளும் அநீதிகள்.” எனும் டீவீட்டை பகிர்ந்து ட்விட்டர் நிறுவனம் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
இதேபோல், பேஸ்புக்கின்
துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் தனது ப்ரொபைல் படம் மற்றும் அட்டைப் படத்தை மாற்றியுள்ளது. இது ‘#ShareBlackStories’ என்ற ஹேஷ்டேக் மூலம் தகவல்களை பகிர்ந்து வருகிறது.
2012’ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க அமெரிக்க மனிதரான டிரேவோன் மார்ட்டினை சுட்டுக் கொன்றதாக கூறப்பட்ட ஜார்ஜ் சிம்மர்மேன் விடுவிக்கப்பட்ட பின்னர்
#BlackLivesMatter இயக்கம் 2013’இல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிக் கார்னர் மற்றும் மைக்கேல் பிரவுன் ஆகிய இரு கறுப்பர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்ட பின்னர், இது 2014’இல் வேகத்தை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது ஜார்ஜ் ஃபிலாய்ட் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது
கருத்துகள் இல்லை