அரை நிர்வாணத்துக்கு மன்னிப்புக் கேட்ட பெண் செனட்டர்
முக்கியமான கூட்டம் ஒன்று வீடியோ காலில் நடந்து கொண்டிருந்தபோது, அந்த
பெண் அதிகாரி திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிவிட்டார்.. இதை பார்த்ததும் மற்ற
அதிகாரிகள் பதறிபோய்விட்டனர்.. மார்த்தா லூசியா மிச்சர் என்ற.அந்த பெண் அதிகாரியின்
வயசு 66.
மெக்சிகோவிலும்
தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் ஜூம் வீடியோ கால்
மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்... அப்படித்தான் ஒருகூட்டம் நடந்தது.. ஜூம் வீடியோவில்
எல்லா அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசி கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் பெண் செனட்டர்
அதிகாரியும் கலந்து கொள்ள இருந்தார்.. தொற்று குறித்து ஆலோசனை மேற்கொள்ள தயாராக இருந்த
நிலையில், வீடியோ காலில் திடீரென அரை நிர்வாணமாக பெண் செனட்டர் தோன்றிவிட்டார்.. அதாவது
டாப்-லெஸ் ஆக நின்றார்... சக அதிகாரிகள் இதை கவனித்துவிட்டு, அந்த பெண் அதிகாரியிடமே
சொன்னார்கள்.. இதையடுத்து அவர் அவசர அவசரமாக உடையைப் அணிந்தார்.
இச் சம்பவம் பற்றி பற்றி அவர் சொல்லும்போது,"கேமிரா
ஆன் ஆகிவிட்டது
தெரியவில்லை, அதனால் அப்படியே நின்று துணி மாற்றி கொண்டிருந்தேன், எனக்கு
உதவி செய்த சக செனட்டர்களுக்கு நன்றி.. தற்செயலாக என்னுடைய உடலை காட்டிய இந்த சம்பவத்திற்காக
நான் எதுவும் அவமானப்பட போவதில்லை... ஏனென்றால், அது பெண்களின் சாதாரண மற்றொரு உறுப்பு
போன்றதுதான்... எனக்கு இப்போ 66 வயதாகிறது. 4 குழந்தைகளுக்கு பாலூட்டியுள்ளேன்"
என்று தன் தரப்பு விளக்கத்தை சொல்லியதுடன், இந்த விஷயத்திற்கு மன்னிப்பும் கேட்டார்.
கருத்துகள் இல்லை