டர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்கைகள்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதல் பிரச்சாரத்துக்கு தயாரானார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை. இதனால் டர்ம்ப் அதிர்ச்சியடைந்தார்,
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தோல்வி, மருந்து கண்டுப்பிடிப்புகளில் இடையூறுஇ இனவெறிப் பிரச்சினைஇ போராட்டங்கள்இ கடும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை ட்ரம்பின் செல்வாக்கைக் குறைத்து கருத்துக் கணிப்புகளும் ஜனநாயக வேட்பாளர் பிடனுக்கு ஆதரவாகவே வெளிவந்துள்ளன.
மேலும் துல்சா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் துல்சாவுக்கு புறப்பட்டார் ட்ரம்ப் தன் பிரச்சாரத்தைக் கேட்க அலைகடலென திரண்டிருப்பார்களென்று எதிர்பார்த்தார். ஆனால் 25 பேர்தான் இருந்தனர். 40,000 பேர் வரை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
சனிக்கிழமை மாலை 5:51க்கு அவர் துல்சா வந்திறங்கினார் அவரிடம் உறுதியளிக்கப்பட்டிருந்த கூட்டத்தை காணோம். இந்தக் கூட்டத்திலும் பேசிய ட்ரம்ப், கொரோனா வைரஸ் சோதனைகள் அதிகரிப்பினால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது சோதனைகளை குறைக்க அறிவுறுத்தியுள்ளேன் என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
கூட்டம் நடந்த அரங்குக்கு வெளியேயும் ட்ரம்ப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் கூட்டம் ஏனோ ரத்து செய்யப்பட்டது.
தனக்கு ஆதரவு குறைவதாக கருதும் ட்ரம்ப் கடும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை