பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேற்று முன்தினம் இரவு கடுமையாக மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர் அடைந்தனர். சீனாவை சேர்ந்த சுமார் 35 ராணுவ வீரர்கள் இந்தியாவின் பதிலடியில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சீனா தனது
பலி எண்ணிக்கை பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் அது சண்டையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை
அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இன்று ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில்
தூதரக அதிகாரிகள் ராணுவ மட்டத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு சீனா விரும்புகிறது. கல்வான் பள்ளத்தாக்கு இறையாண்மை சீனாவின் வசம்தான் உள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எல்லைப்புற இறையாண்மையை மதிக்காமல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு நடுவேயும் இந்திய தரப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய தரப்பு தனது ராணுவ வீரர்களை கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் எல்லைக்குள் புகுந்து தூண்டுதல் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட வேண்டாம் எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை