அரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
ஈரான் அரசாங்கத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானின் பிரபல நடிகையான தரனாஹ் அலிதூஸ்டிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தி சேல்ஸ்மேன் என்ற திரைப்படத்தில் ஈரானிய நடிகையான தரனாஹ் அலிதூஸ்டி நடித்திருந்தார்.இப்படத்திற்கு 2017-ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது(சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்) வழங்கப்பட்டது. இதனால் மிகவும் பிரபலமான தரனாஹ் அலிதூஸ்டி ஈரானில் தெரு ஒன்றில் ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணைத் பொலிஸார் தாக்கும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது.
இது அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், அவர் உடனடியாக சிறையில அடைக்கப்படுவாரா? என்பது குறித்து தெரியவில்லை.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தரனாஹ் அலிதூஸ்டி சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.
தரனாஹ் அலிதூஸ்டி இந்த ஆண்டின் துவக்கத்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஈரான் அரசை விமர்சித்தார். அதுமட்டுமின்றி, ஈரானியர்களுக்கு விசா தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக அலிதூஸ்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை