• Breaking News

    காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது



       
    காக்காமுட்டை படத்தில் சிறுவர்களாக நடித்திருந்த விக்னேஷ்-ரமேஷ் ஆகிய இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தாடி மீசையுடன் ஆளே மாறிப்போய் உள்ளனர். பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டையா இப்படி ஆயிட்டாங்க என நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்

    தனுஷ் தயாரிப்பில்இ கடந்த 2014-ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை. குப்பத்து பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள்  உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன்.

    இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்தார்கள்.  இவர்கள் இருவருக்கும் பாராட்டுகள் பல கிடைத்தது. இதைத்தொடர்ந்து நயன்தாராவின் அறம் படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad