செர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்
செர்பியாவில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது அங்கு கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சமயத்தில் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று செர்பியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
முக கவசம், சானிடைசர்
கட்டாயம் என்ற உத்தரவுடன் வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். மொத்தம் 60 புள்ளி
6 லட்சம் வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளதாகவும், பலர் தொற்று பரவல் அச்சத்தால்
தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கிற்கு
பிறகு ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை