ஆப்கானிஸ்தான் போர்க்குற்றம் பற்றி விசாரிக்கும் சர்வதேச நீதிமன்ற அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது
அமெரிக்காவில்
2001-ம் ஆண்டு பின்லேடன்
ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள்
விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தியதால் 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் பலியாகினர். இந்த பயங்கரவாதிகளுக்கு
புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான்
மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலிபான்களை
ஆட்சியில் இருந்து அகற்றியது.
இந்த போரின்போது அமெரிக்காவின்
சி.ஐ.ஏ.வால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு காவல் மையங்களில், போர் கைதிகளை அமெரிக்க ராணுவம் சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணை நடத்துகிற அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவானது, சர்வதேச நீதிமன்ற அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதை தடுக்கவும் வழிவகை செய்துள்ளது. இந்த உத்தரவை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த முடிவு, சட்டத்தின் ஆட்சியில் தலையிடுவதற்கான முயற்சி என்று கருத்து தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தை
ட்ரம்ப் எப்போதுமே விமர்சித்து வந்துள்ளார், அதன் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியும் இருக்கிறார். சர்வதேச நீதிமன்றம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் அமெரிக்கா கையெழுத்து போடவும் இல்லை. அமெரிக்க குடிமக்கள் மீதான சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்கவும் இல்லை. ட்ரம்ப் பிறப்பித்துள்ள நிர்வாக உத்தரவு, சர்வதேச நீதிமன்ற அதிகாரிகளின் குடும்பத்தினர் அமெரிக்காவில் நுழையவும் தடையாக அமைந்துள்ளது.ட் நடவடிக்கை, சர்வதேச உரிமை குழுக்களின் விமர்சனத்துக்கு ஆளாக்கி உள்ளது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் செய்ததாக கூறப்படும் போர்க்குற்றம் பற்றிய குற்றச்சாட்டுகளை மட்டுமின்றி. தலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் . சர்வதேச நீதிமன்றம் விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை