கடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட டிரம் ஒன்று மிதந்து வந்து உள்ளது. இதனை கண்ட அந்த பகுதி மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல் துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, டிரம்மை மீட்டு சோதனையிட்டனர். அதில், சீன மொழியில் டீ தூள் என எழுதப்பட்ட 78 பண்டல்கள் இருந்தன. அவை பார்ப்பதற்கு போதைப்பொருள் போல இருந்ததில் சந்தேகமடைந்த பொலிஸார் அனைத்து பண்டல்களையும் கைப்பற்றி, ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தியாயாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சீன மொழியில் எழுதப்பட்ட பண்டல்கள் கடலில் மிதந்து வந்தது, அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை