• Breaking News

    அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை.. கடைசி வரை மீறாத சச்சின்!

     

    சச்சின் டெண்டுல்கர் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் ஒன்றை கடைசி வரை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பொருட்களின் விளம்பரங்களை தான் ஒரு கிறிக்கெற் வீரராக ஆதரிக்க மாட்டேன் என தந்தையிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளார் சச்சின்.

     சச்சின் டெண்டுல்கர் கடைசி வரை புகையிலை, மதுபான விளம்பரங்களில் நடிக்கவில்லை. அந்த பொருட்களை ஆதரிக்கவும் இல்லை. இது பற்றி சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டியில் தான் ஏன் அவற்றை ஆதரிக்கவில்லை என விரிவாக கூறி உள்ளார்.

    "நான் என் தந்தைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். நான் ஒரு முன்னுதாரணம், நிறைய பேர் என்னை பின்பற்றுவார்கள் என அவர் கூறினார். அதனால் தான் எப்போதும் புகையிலை, மதுபான பொருட்களை ஆதரிக்கவில்லை" என்றார் சச்சின்.

    "90களில் என் பேட்டில் ஸ்டிக்கர்கள் இல்லை. அவை தொடர்பான ஒப்பந்தங்களும் செய்யவில்லை. ஆனால், அணியில் இருந்த அனைவரும் குறிப்பாக இரண்டு பிராண்ட்களை விளம்பரம் செய்தார்கள் - வில்ஸ் மற்றும் ஃபோர் ஸ்கொயர்." என்றார் சச்சின்.

    "இந்த பொருட்களை நான் விளம்பரம் செய்யாமல் இருந்தேன். அதன் மூலம் நான் என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறவில்லை. அவர்களிடம் இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அவர்கள் பிராண்டை நான் ஆதரித்து என் பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளுமாறு கேட்டார்கள். நான் அதை விளம்பரம் செய்யவில்லை" என்றார் சச்சின்.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad