• Breaking News

    பாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..

      

     பாகிஸ்தான் கிறிக்கெற் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்குக் கிளம்பவுள்ள நிலையில் அந்த அணியின்  சதாப் கான், ஹாரிஸ் ராப், ஹைதர் அலி ஆகிய 3 வீரர்களுக்கும் நேற்று கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.  இதனால் பாகிஸ்தான் கிறிக்கெற் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

     இதுதொடர்பாக பாகிஸ்தான் கிறிக்கெற்  சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

     ராவல்பிண்டியில் இவர்களுக்கு சோதனை எடுக்கப்பட்டபோதுதான் மூவருக்கும்    பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. சோதனை எடுக்கும் வரை அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. தற்போது அவர்கள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    சதாப் கான் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 3 வீரர்களில் இவர் மட்டுமே சற்று பிரபலமான வீரர். ராப் இரண்டு  ரி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள பேட்ஸ்மேன் ஆவார். ஹைதர் அலிக்கு இதுதான் முதல் இங்கிலாந்து தொடர். அவர் 3 டெஸ்ட், 3 ரி20 போட்டிகளில்ஆடியுள்ளார்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad