ஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு
ஐ.நா.வின் 75வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஐ.நா.
சபையின் 75வது ஆண்டையொட்டி புதிய உறுதிமொழி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான
வரைவு உறுதிமொழி மீது கருத்து தெரிவிக்கும்படி ஐ.நா. பொது சபையின் தலைவர் திஜானி முகமது
பாண்டே கூறியிருந்தார். 'இந்த உறுதிமொழிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் அது
ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த
நிலையில் இந்தியா பிரிட்டன் அமெரிக்கா அவுஸ்திரேலியா நியூசிலாந்து கனடா ஆகியவை இந்த
உறுதிமொழியின் சில வாசகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அந்த உறுதிமொழியின் இறுதியில்
'சிறந்த எதிர்காலம் என்ற நமது பொதுவான எண்ணத்தை அடைய இணைந்து செயல்படுவோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை
'ஐ.நா. விதிகளின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் சிறந்த எதிர்காலம் என்ற பொதுவான
எண்ணத்தை அடைய இணைந்து செயல்படுவோம்' என மாற்ற வேண்டும் என ஆறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
முதலில்
குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமொழியில் உள்ள வாசகத்தை
ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த மாற்றத்தை செய்யும்படி இந்த ஆறு நாடுகளும்
வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாசங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த
ஆறு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது வர்த்தகம் எல்லை பிரச்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை