சுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்
சல்மான் கானுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த 14 ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிக மன அழுத்தம்
காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின்
மூலம் அதிக ரசிகர்களை பெற்ற சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டில் வளர்ந்து வரும் ஒரு
இளம் நடிகராக வலம் வந்தார்.
கடந்த
6 மாதங்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் 7 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதிரடியாக
நீக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சுஷாந்த்
சிங் ராஜ்புத். சுஷாந்துக்கு மன உளைச்சல் மன அழுத்தம் ஏற்பட பாலிவுட்டில் உள்ள சில
முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட்டில் உள்ள வாரிசு நட்சத்திரங்கள் சிலர் வேற்று மொழிக்காரரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது. கடந்த 6 மாதங்களாக பாலிவுட்டில் நடக்கும் எந்தப் பார்ட்டிக்கும் அவரை அழைக்காமல் ஒதுக்கிவைத்திருந்தது தெரிய வந்துள்ளது. சுஷாந்த் மரணமடைந்த பிறகு அவரது மரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றால் சல்மான் கானுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும மோதல் வெடித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சுஷாந்த்
சிங்கை தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க சல்மான் கான் பேச்சுவார்த்தை நடத்தி
வந்துள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றுக்கு சுஷாந்த் சென்றுள்ளார்.
அங்கு இளம் நடிகரும், நடிகர் ஆதித்ய பன்ச்சோலியின் மகனுமான சூரஜ் பன்ச்சோலிக்கும் இடையில்
தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாலிவுட்டின் தாதாவான சல்மான் கானிடம்
கொண்டு சென்றுள்ளார். சூரஜை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த சல்மான் கான்,
இந்த விஷயத்தை கேட்டு டென்ஷனாகி சுஷாந்திடம் போனில் விசாரித்துள்ளார். அப்போது
சுஷாந்த், தனது தரப்பு ஞாயத்தை எடுத்து சொல்லி சல்மான் கானிடம் எதிர்த்து பேசியதாக
தெரிகிறது. இதனால் கடுப்பான சல்மான் கான் அப்போதே சுஷாந்தை மிரட்டியிருக்கிறார். அதன்
தொடர்ச்சியாக அவரது படத்தில் சுஷாந்தை நடிக்க வைக்கும் திட்டத்தை விட்ட சல்மான் கான்,
அவருக்கு பாலிவுட்டில் யாரும் வாய்ப்பு கொடுக்க கூடாது என கட்டளையிட்டதாக தெரிகிறது.
பெரும்புள்ளிகளுக்கு பயந்து பாலிவுட்டின் பெரிய தலையான சல்மான் கான் பேச்சை மீறி சுஷாந்துக்கு
பட வாய்ப்பு கொடுக்க ஹிந்தி திரைப்பிரபலங்கள் மறுத்துவிட்டனர். அதையும் மீறி பட வாய்ப்புகளை
கொடுத்தவர்களும் சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு பயந்து அவரை
ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட
மன அழுத்தம் காரணமாகவே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக
கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சல்மான் கான் தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர்,
சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சல்மான கான் மீது கொண்ட வெறுப்பால் கடந்த சனிக்கிழமை பாந்த்ராவில் உள்ள அவருக்கு சொந்தமான Being Human Stor முன்பு ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். பிரபலங்கள் பலரும், சல்மான் தங்களையும் இதுபோன்று பழி வாங்கியிருப்பதாக கூறியிருக்கின்றனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சல்மான் கானை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கைம் மளமளவென குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை