• Breaking News

    ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு கண்ணீர்மல்க விடை கொடுத்த மக்கள்


    அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில்  பொலிச் அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டின் இறிதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்து கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

      ஜார்ஜ் பிளாய்டின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. தேவாலய பிரார்த்தனைக்கு பிறகு, அங்கிருந்து ஜார்ஜ் பிளாய்டு உடல், குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


    இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலம் செல்லும் சாலையின் ஓரத்தில் சிலர் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர்.


    இறுதி ஊர்வலம் பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நிறைவடைந்தது. அங்கு ஜார்ஜ் பிளாய்டின் உடல், அவரது தாயாரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கண்ணீர்மல்க ஜார்ஜ் பிளாய்டுக்கு மக்கள் விடை கொடுத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad