மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
மெக்ஸிகோவில் 7.7 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவில்
நேற்று இரவு 8.59 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற
அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால்இ கட்டடங்கள் குலுங்கின. பீதியில் உறைந்த மக்கள் ரோடுகளில்
வந்து தஞ்சமடைந்தனர். மெக்ஸிகோவின் ஒக்ஷாகா நகரின் சசன் மிகுல் டெல் பெட்ரோ பகுதியிலிருந்து
31 கி.மீ.இ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்துஇ
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
ரிக்டர் அளவுகோலில்இ 7க்கு மேல் பதிவாகி இருந்தால் கடும் நிலநடுக்கமாக அது கருதப்படும். மெக்ஸிகோவில் கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. அந்த நிலநடுக்கத்திற்கு 355 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை