விமானத்தின் ஜன்னலை உடைத்த பெண் பயணி
சீனாவில் கடந்த மாதம் விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மதுபோதையில் ஜன்னலை தாக்கி உடைத்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் விமானம் ஒன்று சைனிங்கிலிருந்து கடலோர நகரமான யான்செங்கிற்கு புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த இளம் பெண் பயணி ஒருவர் தனக்கு அருகே இருந்த விமானத்தின் ஜன்னலை உடைத்துள்ளார். ஆனால் அப்போது விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் திடீரென விமானத்தின் ஜன்னலை உடைக்க தொடங்கியதால், அந்த விமானம் பறக்காமல் உடனடியாக ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோவில் தரை இறக்கப்பட்டது. இதனையடுத்து விமாநிலைய அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லி என்பதும், அந்தப் பெண் பயணி அதிக போதையில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததையும் ஜன்னலை தாக்கி உடைக்க முயன்றதையும் அருகில் அமர்ந்திருந்த பயணிகள் பார்த்துள்ளனர். பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணின் செயல் சக பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கருத்துகள் இல்லை