பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான் மரணம்
வாஜித் இறந்த செய்தியை இசையமைப்பாளர்
சலீம் மெர்ச்சண்ட் உறுத்தி படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது
அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது, சிறிது நாட்களுக்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்தது ... கடந்த நான்கு நாட்களாக அவர் வென்டிலேட்டரில்
இருந்தார், அவரது நிலைமை மோசமடையத் தொடங்கியது இன்று காலை காலமானார் எனகூறினார்.
சஜித்- வாஜித் இருவரும் சல்மானின் 1998 ஆம் ஆண்டு வெளியான "பியார் கியா தோ தர்ணா க்யா" திரைப்படத்தின்
மூலம் பாலிவுட்டில் அறிமுகமனார்கள் பல்வேறு படங்களில் "கார்வ்", "தேரே நாம்", "தும்கோ நா பூல் பேயங்கே", உள்பட படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
சல்மான் கானின் படங்களான "வாண்டட்", "தபாங்" மற்றும் "ஏக் தா டைகர்" ஆகிய படங்களில் பணிபுரிந்து உள்ளனர்.
"மேரா ஹீ ஜல்வா", "ஃபெவிகால் சே" போன்ற படங்களில் சல்மானுக்காகவும், "ரவுடி ரத்தோர்" படத்திலிருந்து "சிந்தா தா சிட்டா சிட்டா" படத்தில் அக்ஷய் குமார் ஆகியோருக்காகவும் வாஜித் பின்னணி பாடி உள்ளார். அவர் சமீபத்தில் சல்மானின் "பியார் கரோனா" மற்றும் "பாய் பாய்" பாடல்களை பாடி உள்ளார்.
கருத்துகள் இல்லை