இனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்
கொரோனா வைரஸ் காரணமாக கிறிக்கெற் போட்டிகளில் பந்தை எச்சில்படுத்த தடை விதித்துள்ளது ஐசிசி. சச்சின் டெண்டுல்கர் இந்த விதியால் மூத்த பந்துவீச்சாளர் ஒருவர் இனி தன் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த பந்துவீச்சாளர் பந்துவீசும் முன் பந்தை முத்தமிடுவார். அவர் இனி பந்தை முத்தமிட முடியாது என புகைப்படம் போட்டு சுட்டிக் காட்டி கலாய்த்து இருக்கிறார்.
கிறிக்கெற்
பந்தை எச்சில் படுத்தக் கூடாது என்ற விதி உருவாக்கப்பட்டது. அது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு
கடும் சிக்கலை உண்டாக்கும் என கூறப்பட்டது. காரணம் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய முடியாது.
வேறு ஒரு பிரச்சனை இந்த நிலையில் லசித் மலிங்காவுக்கு பந்து ஸ்விங் ஆகாமல் போவது கூட
பிரச்சனை இல்லை. மாறாக வேறு ஒரு பிரச்சனை உள்ளது. அவர் பந்துவீசும் முன் பந்தை முத்தம்
கொடுத்து பின் ஓடி வந்து வீசுவார். தற்போதைய ஐசிசி விதிப்படி அவர் இனி அப்படி செய்ய
முடியாது.
அதைப் பற்றி குறிப்பிட்ட சச்சின் டெண்டுல்கர் அவர் பந்தை முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் "புதிய ஐசிசி விதிகளின் படி குறிப்பிட்ட ஒருவர் தன் பந்துவீச்சை மாற்றிக் கொள்ள வேண்டும்.. என்ன சொல்கிறீர்கள் மலி?" என வினவியுள்ளார்.
கருத்துகள் இல்லை