ஜூனியர் செரீனா
டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் செரீனாவும் அவரின் இரண்டு வயதுக் குட்டி மகள் அலெக்சிஸ் ஒலிம்பியாவும் ஒரு காலை வேளையில் முகம் கழுவி, சருமப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். தாயும் மகளும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து, அருகருகில் நின்று, முகத்தை ஈர டவல் கொண்டு துடைக்கின்றனர். ‘நாங்கள் எங்கள் காலை வேலைகளைச் செய்கிறோம். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, ஏனென்றால் இந்தச் சிறிய பெண் நான் செய்யும் எல்லாவற்றையும் மிகவும் அழகாகச் செய்கிறாள்’ என்று தான் செய்வதையே கியூட்டாக காப்பி பேஸ்ட் செய்யும் தன் மகளை மெச்சும் செரீனா, அந்த வீடியோவில் தன் சருமப் பராமரிப்பு பற்றியும் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை