• Breaking News

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இரத்து

    அமெரிக்காவில்  கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஜனாதிபதித்  தேர்தல் பிரசாரத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ரஇத்து செய்துள்ளார் 

     அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 1,25,480 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தான் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.  

    தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தாலும், புளோரிடா, டெக்சாஸ் ,அரிசோனா  ஆகிய மாகாணங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கள விவரங்களை அறியவுள்ளதாகவும் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த, கிரேட் அமெரிக்கன் கம்பேக் டூர்' என்ற நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் என்பதால் நிகழ்ச்சியை ஒத்திவைத்ததாகவும், விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் திகதி குறித்து அறிவிப்போம் என ட்ரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad