சிந்தியா ரிச்சியை விரும்பிய இம்ரான்கான்
பாகிஸ்தான்
முன்னாள் உள்துறை
மந்திரி ரகுமான்
மாலிக் மீது
பாலியல் புகார்
கூறிய அமெரிக்க
ப் பெண்ணான சிந்தியா ரிச்சியுடன் செக்ஸ் உறவு
வைத்துக்கொள்ள இம்ரான்கான்
விரும்பினார் என்ற
தகவலை டி.வி.
பிரபலம் அம்பலப்படுத்தி
உள்ளார். இது
புதிய பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தள
பதிவுகளால் பிரபலமானவர்,
அமெரிக்க பெண்ணான
சிந்தியா ரிச்சி.
இவர் பாகிஸ்தான்
முன்னாள் பிரதமர்
மறைந்த பெனாசிர்
பூட்டோ குறித்து
டுவிட்டரில் வெளியிட்ட
அவதூறு பதிவு,
அங்கு பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த சர்ச்சை
முடிவுக்கு வருவதற்கு
முன்பாக அவர்
தனது ‘பேஸ்புக்’
பக்கத்தில் வீடியோ
பதிவு ஒன்றை
வெளியிட்டார். அந்த
பதிவில் அவர்
2011-ம் ஆண்டு
பாகிஸ்தான் முன்னாள்
உள்துறை மந்திரி
ரகுமான் மாலிக்,
தன்னை பாலியல்
பலாத்காரம் செய்தார்
என்று பகிரங்கமாக
குற்றம்சாட்டினார்.
இஸ்லாமாபாத்தில்
உள்ள அந்த
நாட்டின் ஜனாதிபதி
மாளிகையில் வைத்து,
தன்னிடம் உடல்ரீதியில்
தொடர்பு கொண்டதாக
பெனாசிர் கட்சியை
சேர்ந்த முன்னாள்
பிரதமர் யூசுப்
ராசா கிலானி
மீதும், முன்னாள்
மந்திரியான மகதூம்
சகாபுதீன் மீதும்
குற்றம் சாட்டினார்.
தன்னை பெனாசிர்
பூட்டோவின் பாகிஸ்தான்
மக்கள் கட்சி
தலைவர்கள் மிரட்டுவதாகவும்
குறிப்பிட்டார். இந்த
புகார் பாகிஸ்தானில்
பெருத்த அதிர்வலைகளை
ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில்
அடுத்த கட்டமாக
பாகிஸ்தானின் தற்போதைய
பிரதமர் இம்ரான்கான்
மீது பாலியல்
புகார் எழுந்துள்ளது.
இந்த பாலியல்
புகாரும், அமெரிக்க
பெண்ணான சிந்தியா
ரிச்சியுடன் தொடர்புடையது
என்பது கவனத்தை
ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.
இந்த புகாரை
சிந்தியா ரிச்சி
நேரடியாக கூற
வில்லை. தனது நண்பரான
பாகிஸ்தான் டி.வி.
தொகுப்பாளர் அலி
சலீமிடம் கூறி
இருக்கிறார் .அவரே
வெளியே சொல்லி
பகிரங்கப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி
இப்போது அலி
சலீம் என்ற
பேகம் நவாசிஷ்
அலி கூறி
இருப்பதாவது:-
சிந்தியா
ரிச்சி ஒரு
காலத்தில் என்னுடன்
நெருங்கிய தொடர்பில்
இருந்தார். அப்போது
நானும் அவரும்
ஒரே அறையில்
இருந்தோம். அவர்
என்மீது நம்பிக்கை
வைத்திருந்தார். அப்போது
அவர் பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான்கான்
என்னுடன் செக்ஸ்
உறவு வைத்துக்கொள்ள
விருப்பம் தெரிவித்தார்
என கூறினார்.
அதே நேரத்தில்
முன்னாள் உள்துறை
மந்திரி ரகுமான்
மாலிக் தன்னை
பலாத்காரம் செய்தார்
என்பது பற்றி
அவர் என்னிடம்
எதுவும் சொல்லவில்லை
என்று அவர்
கூறினார். இதை
அலி சலீம்
அம்பலப்படுத்தி இருப்பது
பாகிஸ்தானில் புதிய
பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
கருத்துகள் இல்லை