ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலக முழுவதும் உள்ள கறுப்பின மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: கானா ஜனாதிபதி
ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம்
உலகம் முழுவதும் உள்ள கறுப்பின மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
என்று கானா ஜனாதிபதி அகுபோ - அடோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கானா
ஜனாதிபதி அகுபோ - அடோ கூறும்போது,
“ அமெரிக்காவில் பொலிஸாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கறுப்பின மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மோசமான பக்கத்தை நினைவுப்படுத்தியுள்ளது. இது சரியானது அல்ல. அமெரிக்காவில் உள்ள எங்கள் உறவுகளின் கடினமான நேரத்தில் நாங்கள் துணை நிற்போம். கானா மக்களின் சார்பாக ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை