சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்
நாஸாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டனர். நாஸாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.
பாப் பென்கன் ,டக் ஹர்லி 2 வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர், கிட்டத்தட்ட 19 மணிநேர பயணத்திற்கு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தை சென்றடைந்தனர். விண்வெளி மையத்தில் அவர்களை அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி, விண்வெளி வீரர்களான அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் வரவேற்றனர்,
நாஸாநிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் ஹூஸ்டனில் பணி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு குழுவினருடன் பேசினார்.
கருத்துகள் இல்லை