அமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நீண்டகால சிறைவாசம்
அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் வன்செயலாக மாறும்போது அரச,தனியார் சொத்துகலுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன. தலைவர்கலின் சிலைக< நினைவிடங்கள் என்பனவும் சேதப்படுத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. தலைவர்களின் சிலைகலைச் சேதப்படுத்துபவர்களுக்கு நீண்டகாலம் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுளார்.
ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டங்களின்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் பெரும் மோதல்கள் வெடித்தன. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் என்பன சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்காவில் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், மிகவும் வலுவான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
‘அமெரிக்க நினைவுச்சின்னங்கள், நினைவிடங்கள், சிலைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் மிக வலுவான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதன்மூலம், தேசத்திற்கு எதிரான சட்டவிரோத செயல்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படும்’ என ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த நிர்வாக உத்தரவு தொடர்பான விவரங்களை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை.
கடந்த திங்கட்கிழமை, வெள்ளை மாளிகை அருகே உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையை சேதப்படுத்த போராட்டக்காரர்கள் முயன்றது தொடர்பாக பேசிய ட்ரம்ப், வலுவான உத்தரவை தான் தயாரித்து வருவதாகவும், அது இப்போதுள்ள சட்டத்தை வலுப்படுத்தும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
தலைவர்களின்
சிலைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எந்த ஒரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தினாலோ,
சேதப்படுத்த முயற்சித்தாலோ
அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
விதிக்க தற்போதுள்ள சட்டம் வகை செய்கிறது.
கருத்துகள் இல்லை