உக்ரைன் ஜனாதிபதியின் மனைவிக்கு கொரோனா
உக்ரைன் நட்டின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பாதிக்கப்பட்டுளள நிலையில், ஜனாதிபதியான கணவர் மற்றும் அவர்களது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை ஒலேனா ஜெலன்ஸ்கா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தற்போது நன்றாக இருப்பதாக உணர்வதாகவும், வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்பத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இதுவரை 29 ஆயிரம் கொரோன தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 870 பேர் பலியாகியுள்ளனர். மே மாதம் கடைசியில் இருந்து உக்ரைன் லாக்டவுனை படிப்படியாக தளர்த்தி வருகிறது.
கருத்துகள் இல்லை