சினிமாத்துறையிலிருந்து வைரமுத்து வெளியேற்றப்பட வேண்டும் இயக்குநர் சிஎஸ் அமுதன்
கவிஞர் வைரமுத்து
சினிமாத்துறையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பிரபல இயக்குநர் சி.எஸ். அமுதன்
தெரிவித்திருப்பது
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து.
இவர் இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 7 தேசிய விருதுகளை
குவித்திருக்கும் வைரமுத்து, தமிழக அரசின் விருதுகள் மற்றும் பல்வேறு பிலிம் ஃபேர்
விருதுகளையும் குவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாடகியான சின்மயி,
தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் அளித்தார். இந்த விவகாரம்
பெரும் பூதாகரமானது. சின்மயியை தொடர்ந்து மேலும் சிலரும் கவிஞர் வைரமுத்து மீது பாலியல்
குற்றச்சாட்டுக்களை கூறினர். வைரமுத்து மீதான இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புகளும்
ஆதரவுகளும் ஒன்றாக எழுந்தது. குறிப்பாக சின்மயி, பல எதிர்மறையான ரியக்ஷன்களை எதிர்கொண்டார்.
தமிழ் சினிமாவில் அவருக்கான பாடும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டன. டப்பிங் சங்கத்தில்
இருந்தும் நீக்கப்பட்டார்
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து குறித்து சில்வர் ஸ்க்ரின் மீடியா தனது இணையதள பக்கத்தில் வைரமுத்து குறித்து கவிஞரும் அவர் கொள்ளையடிக்கும் வழிகளும் என குற்றம்சாட்டியவர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது சில்வர் ஸ்க்ரீன் மீடியா. இதனை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான சிஎஸ் அமுதன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளார். மேலும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகவும் அவர் டிவிட்டியுள்ளார்.
அவர் டிவிட்டியிருப்பதாவது, இங்கே விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வில் தனது விருப்பத்திற்கு எதிரான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என சின்மயி மிரட்டப்பட்ட போது முதல் ஆளாக நான் தான் அழைத்தேன். அவருடைய பயம் உண்மையானது. இந்த மனிதர் நம்முடைய தொழில்துறையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த டிவிட்டை பார்த்த சின்மயி, உங்களுடைய அனுமதியில்லாமல் உங்களின் பெயரை சொல்ல வேண்டாம் என்பதால்தான் சொல்லவில்லை என இயக்குநர் சிஎஸ் அமுதனுக்கு நன்றி கூறியுள்ளார். இயக்குநர் சிஎஸ் அமுதனின் இந்த டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சிஎஸ் அமுதன் தமிழ் சினிமாவில் வந்த அனைத்து படங்களில் இருந்தும் காட்சிகளை எடுத்து அதை விமர்சிக்கும் வகையில் 'தமிழ்ப்படம்' என்ற படத்தை இயக்கினார். 2010ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமான தமிழ் படம் 2 என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகம்
கருத்துகள் இல்லை