சீன விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
சீனாவைச் சேர்ந்த நான்கு விமானச் சேவை நிறுவனங்கள் அமெரிக்கா வருவதற்கும் அமெரிக்காவிலிருந்து இயக்குவதற்கும் வரும் 16 ஆம்திகதி முதல் தடைவிதிக்கப் போவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
விமானச் சேவை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை சீனா பின்பற்றவில்லை. எனவே அவர்களது விமான நிறுவனங்களை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க விமானத் துறை தெரிவித்துள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடட் ஏர்லைன்ஸ் ஆகிய இரு அமெரிக்க விமான நிறுவனங்கள் இந்த வாரம் முதல் அமெரிக்கா - சீனா இடையே விமானச் சேவையை தொடங்க இருந்தன. அதற்கு சீனா அனுமதி மறுத்தது. இந்நிலையில் சீன விமான நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்ய முடிவெடுத்துள்ளது.
ஏர் சீனா, சீனாஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், ஜியாமென் ஏர்லைன்ஸ் ஆகிய நான்கு விமானச் சேவை நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது. சீன விமானத் துறையுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதுவரையில் சீனாஎத்தனை அமெரிக்க விமானங்களை அனுமதிக்கிறோதோ அதே எண்ணிக்கையில்தான் அமெரிக்கா, சீன விமானங்களை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தீவிரமடைவதற்க்கு முன்னால் சீனா -அமெரிக்காவுக்கு இடையே வாரத்துக்கு 325 விமானங்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் தொடர்பாக சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது.
கருத்துகள் இல்லை