• Breaking News

    பாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி:

    பாகிஸ்தான் கிறிக்கெற் வீரர்களுக்கு நடத்திய கொரோனா சோதனையில் முஹமது ஹபீஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனியார் வைத்தியசாலையில் சோதனை செய்து தனக்கு கொரோனா இல்லை என வெளிப்படுத்தினார். இது ந்க்கு பெரும் சர்ச்சையை உருவாக்கியது அவருக்கு மீண்டும் நடத்டிய சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இங்கிலாந்து செல்ல இருக்கும்  29 பாகிஸ்தான் வீரர்கள், 12 பயிற்சியாளர்  உட்பட்ட குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த பரிசோதனையில் முன்னாள் கப்டன் முஹமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், முன்னணி வீரர் பஹர் ஜமான், ஆல்ரவுண்டர் ஷதாப் கான், புதுமுக வீரர் ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப்  உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முஹமது ஹபீஸ் தனது திருப்திக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்தது.

     

    இதனால் பாகிஸ்தான் கிறிக்கெற் சபை   நடத்திய சோதனையில் குளறுபடியா? என்ற சந்தேகம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஹபீசுக்கு கொரொனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தனிமையில் இருக்காத அவர் மீது பாகிஸ்தான் கிறிக்கெற் சபை  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.

      கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாகிஸ்தான் அணி  இங்கிலாந்துக்குக்குப் பயணமாகிறது. நோய் தொற்று உள்ளவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார்கள்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad