• Breaking News

    இரண்டு கிறிக்கெற் தொடர்களை தள்ளி வைத்தது இந்தியா


    இந்திய கிறிக்கெற் அணி அடுத்து செல்ல வேண்டிய இரண்டு சுற்றுப்பயணங்களை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. இலங்கை அணியுடனான சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக இலங்கை கிறிக்கெற் சபை முன்னதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஓகஸ்டில் நடக்க இருந்த ஸிம்பாப்வே  தொடரையும் சேர்த்து தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.

     
     இந்தியா தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ளது. லாக்டவுனில் பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் நீடிப்பதால் வீரர்களை வெளியே பயிற்சிக்கு அழைக்க பிசிசிஐ தயங்கி வருகிறது.   மேலும், மத்திய அரசு இன்னும் அணியாக வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதி அளிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலேயே பயிற்சி செய்ய அனுமதி உள்ளது.

    இந்த நிலையில் தான் அடுத்த இரண்டு சுற்றுப் பயணங்களை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. இரண்டு சுற்றுப்பயணங்கள் இலங்கை உடனான மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று ரி20 போட்டிகள் மற்றும் ஸிம்பாப்வே அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் ஆகிய தொடர்களை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
    அந்த அறிவிப்பில், "இந்திய கிறிக்கெற் அணி கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இலங்கை , ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்குச் செல்லாது." என குறிப்பிடப்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad