ஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
23 வாரங்கள் மட்டுமே தாயின் வயிற்றில் இருந்த குழந்தை குறை பிரசவமாக பிறந்த நிலையில் மருத்துவர்கள் அந்த குழந்தையை காப்பாற்றி உயிர் வாழ வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் 29 வயதான ஈதன் ரியான். இவரது மனைவி பிரான்சிஸ். 24 வயதான பிரான்சிஸ் 5 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை பிழைப்பதற்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்கள் குழு குழந்தையை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது.
ஆலிவர் கேஷ் என பெயரிடப்பட்ட அந்த ஆண் குழந்தை பிறந்த போது உடல் முழுவதும் சிவப்பாகவும், வெறும் 7 அங்குலம், அதாவது ஒரு சிறிய டிவி ரிமோட் அளவில் மட்டுமே இருந்துள்ளது. இதனால் குழந்தையை தொட பெற்றோர் கூட அனுமதிக்கப்படாதநிலையில் குழந்தையை மருத்துவர்கள் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
இதனிடையே குழந்தைக்கு இரண்டு குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, 11 முறை இரத்தமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதுமட்டும் இல்லாமல் நுரையீரலில் இரத்தப்போக்கு, மூளையில் இரத்த போக்கு, மற்றும் இதய பிரச்சினைகள்.
இப்படி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அந்த 5 மாத குழந்தை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருந்து வெளியேறி உயிர் வாழ அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஒருமுறை கூட தொட்டு பார்க்காத தாய், தனது குழந்தையை முதன்முறையாகப் தொட்டு பார்ப்பதற்கு ஒன்பது வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் இந்த குழந்தையை ஒரு குட்டி போராளி என குழந்தையின் பெற்றோரும், மருத்துவர்களும் அழைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை