• Breaking News

    சர்ச்சிலின் சிலை தாக்கப்பட்டது வெட்கக்கேடானது: ர் போரிஸ் ஜான்சன்



    அமெரிக்காவின் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவர் பொலிஸாரின் பிடியில் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.இந்த நிலையில் இங்கிலாந்தில் நடந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை தாக்கப்பட்டது.

     , வின்ஸ்டன் சர்ச்சில் சிலை தாக்கப்பட்டது வெட்கக்கேடான செயல் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது,
     தேசிய நினைவுச் சின்னம் போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு உண்டானது அபத்தமானது, வெட்கக்கேடானது. சில நேரம் வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய கருத்துகள் இன்றைய நாளில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு ஹீரோ. அவர் இந்த நினைவுச் சின்னத்துக்குத் தகுதி ஆனவர். நாம் நமது கடந்த காலங்களில் திருத்தம் செய்ய முடியாதுஎன்று பதிவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad