ஆபாச நடிகையான வீராங்கனை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான வீரர்கள் தங்களிடம் உள்ள சேமிப்புகள் மற்றும் ஆன்லைன் வருவாய் போன்றவை
கைகொடுக்கின்றன.
ஆனால், நடுத்தர வீரர், வீராங்கனைகளின் பாடு அதோகதி தான். அப்படியிருக்க
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர், ஊரடங்கினால்
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், ஆபாச பட நடிகையாக களமிறங்கியுள்ளார்.
வி8 சூப்பர் கார் ரேஸ்களில் பிரபலமான ரெனி கிரேசி என்னும் அழகி, கார் பந்தய போட்டிகளில் இருந்து விலகியதுடன்,
ஆபாச படங்களில் நடித்து வருகிறார். வி8 சூப்பர் கார் பந்தயங்களில்
போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் பெண் ரெனி கிரேசி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியினால்
தனது குடம்பத்தினருடன்
கலந்து ஆலோசித்தே இந்த முடிவை எடுத்ததாக ரெனி கிரேசி கூறியுள்ளார்.
ரெனி கிரேசி ஆபாச படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது
கருத்துகள் இல்லை