• Breaking News

    வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்..

     அதிபர் ட்ரம்பின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் சாலை பெயரை மாற்றியுள்ளார் வாஷிங்டன் மேயர்.
    அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி போலீஸாரின் பிடியிலிருந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட், மிகவும் மோசமான முறையில் கொல்லப்பட்டார். பட்டப்பகலில் மக்கள் கண்முன்னே சாலையில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    அமெரிக்காவின் அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், ஜார்ஜின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் இனவெறி பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளுடன், அனைத்து மாகாணங்களிலும் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கொரோனா மற்றும் நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தநேரத்தில் மாபெரும் போராட்டம் நடப்பதால் கொதித்துப்போயுள்ளார் அதிபர் ட்ரம்ப். வைரஸ் பிரச்னை, போராட்டம் என எதையும் முறையாகக் கையாள முடியாமல் திணறி வருகிறார். இதனால் போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்தும் அவர்களை அடக்குவதற்காகத் தேசியப் பாதுகாப்புப் படையையும் போராட்டக் களத்தில் இறக்கியுள்ளார் ட்ரம்ப்.

    அதிபரின் செயலுக்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அதிபருக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக வெள்ளை மாளிகைப் பகுதியில் அமைந்துள்ள சாலையின் பெயரை `Black Lives Matter plaza' என மாற்றி அறிவித்துள்ளார் வாஷிங்டன் மேயர் முரியல் பௌசர் (Muriel Bowser).
    இதுபற்றிப் பேசியுள்ள மேயரின் தலைமை தளபதி ஜான் ஃபால்சிச்சியோ, ``மின்னெபொலிஸில் நிராயுதபாணியாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கும் அதனால் அமெரிக்காவின் சட்ட நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கௌரவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    மேலும், கடந்த வாரம் இது யாருடைய வீதி என சர்ச்சை ஏற்பட்டது. மேயர் பௌசர் அதை தெளிவுபடுத்த விரும்பி இதைச் செய்துள்ளார்என்று தெரிவித்துள்ளார். அந்தச் சாலையில் மிகவும் பிரமாண்டமாக மஞ்சள் நிற பெயின்டினால் Black Lives Matter என எழுதப்பட்டுள்ளது.

    ``தேசியப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் தோட்டா கொண்ட துப்பாக்கிகள், லத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி அமைதியாகப் போராடுபவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்கள். மேலும், துருப்புகள் எந்த அடையாளத்தையும் அணியவில்லை, அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    அமைதியான போராட்டக்காரர்களைப் பயமுறுத்தி அவர்களைக் கலைப்பதற்கு போர் போன்ற தந்திரத்தில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை ஆபத்தான குழப்பத்தை வளர்க்கும். அமெரிக்கக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்ட அமலாக்கம் வேண்டும்என்று வாஷிங்டன் மேயர் பேசியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad