படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ்
அமெரிக்காவில்
போலீஸாரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருந்தது
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 20 பக்க பிரேத பரிசோதனை
அறிக்கை வெளியாகியுள்ளது.
ஜார்ஜ் ஹென்னபின்
கவுண்டியின் மருத்துவ அதிகாரியால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பிளாய்டிற்கு அடிப்படையிலேயே
உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் போதை பொருளை பயன்படுத்தியதாகவும் பாதிப்பு
ஏற்பட்டது. ஆனால் கழுத்தை நெரித்ததால்தான் அவர் இறந்தார் என்பதற்கு எதுவும் இல்லை என
குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜ் குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலம் பிரேத பரிசோதனைக்கு
ஏற்பாடு செய்தனர். இனப்படுகொலை அதில் அவரது கழுத்து மற்றும் பின்கழுத்து நெரிக்கப்பட்டதால்
மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாய்டின் கழுத்தில் அந்த
அதிகாரி கால் வைத்து நெரித்ததால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டது. இதனால் இதயம்
செயலிழந்து அவர் இறந்துவிட்டார். இது ஒரு இனப்படுகொலை என அறிக்கை வெளியானது.
கருத்துகள் இல்லை