அமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்
அமெரிக்க இராணுவத்தில் முதன் முறையாக ஒரு படை பிரிவின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்க விமானப்படையில் அடுத்தடுத்து இரு சாதனை நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இரு வாரங்களுக்கு முன் விமானப்படை பணியாளர்களுக்கான அடுத்த தலைமை அதிகாரியாக ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெனரல் சார்லஸ் கே.பிரவுன் நியமனத்தை அமெரிக்க 'செனட்' சபை உறுதிப்படுத்தியது.அமெரிக்க ராணுவத்தில் ஒரு பிரிவின் தலைமை அதிகாரியாக ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவர் ஓகஸ்ட் மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்க இராணுவத்தில் ஒரு பிரிவின் தலைமை அதிகாரியாக பெண்கள் பணியாற்றியதாக வரலாறு இல்லை. இந்நிலையில் அந்நாட்டு விமானப்படையின் முதல் பெண் தலைமை ஆலோசகராக ஜோஆனி எஸ்.பாஸ் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஹவாய் தீவுகளில் உள்ள மிலிலானி நகரை சேர்ந்த இவர் 1993ல் விமானப்படையில் சேர்ந்தார். மிசிசிப்பியில் உள்ள கீஸ்லர் விமானப்படை தளத்தின் ஒரு பிரிவிற்கு தலைமை மாஸ்டர் சார்ஜெண்டாக தற்போது பணியாற்றி வருகிறார்.புதிய பொறுப்பு குறித்து அவர் கூறும்போது ''விமானப்படையின் 19வது தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிக்கிறது. எங்கள் விமானப்படையில் இதுவரை இருந்த சிறந்த தலைவர்களை நான் பின்பற்றுவேன் '' என்றார்.
கருத்துகள் இல்லை