விஜய் தொலைக்காட்சியின் புதிய எபிசோட்கள்
சீரியல்களின்
புதிய எபிசோட்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று
விஜய் தொலைக்காட்சி விளக்கம்
அளித்துள்ளது.
கரோனா
அச்சுறுத்தலால் சின்னத்திரைஇ
வெள்ளித்திரை படப்பிடிப்பு
சுமார் 50 நாட்களுக்கு மேல்
தடைப்பட்டு இருந்தது. இதனால் சீரியல்களின் புதிய
எபிசோட்கள் இல்லாமல்இ பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி
வந்தன தொலைக்காட்சி நிறுவனங்கள்.
இதனிடையே
சில தினங்களுக்கு முன்பு
60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு
தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனைத்
தொடர்ந்து சீரியல் படப்பிடிப்பு தொடங்குவதற்கான
ஆயத்தப் பணிகள் தொடங்கி வருகின்றன.
முன்னணித்
தொலைக்காட்சியான விஜய்
தொலைக்காட்சி அடுத்த
வாரம் முதல் சீரியல்களின் புதிய
எபிசோட்கள் தொடங்கும் என அறிவித்துள்ளது. இது
தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் "வரும்
வாரம் முதல் விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாரதி கண்ணம்மா', 'காற்றின் மொழி', 'ஆயுத எழுத்து', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'தேன்மொழி' ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய
எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும்.
நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செந்தூரப்
பூவே' என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பையும் தொடங்கவுள்ளது
விஜய் டிவி. இரவு 9 மணிக்கு இந்த மெகா சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.
கருத்துகள் இல்லை