முத்தமே கவசம் என்றவருக்கு முத்தம் மூலம் மரணம்
மத்தியப் பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் பல ஆண்டுகளாக போலி ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறிவரும் அஸ்லம் பாபா என்ற சாமியார் கொரோனா கிருமிக்குச் சவால் விட்டு அதில் தோற்றுவிட்டார். தோற்றதோடு விடாமல் அந்தக் கிருமி சாமியாரைக் கொன்றுவிட்டது.
அந்த மாநிலத்தில் கிருமித்தொற்று பெரும் மிரட்டலாக இருப்பதால் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. என்றாலும் அதைக் கேட்காமல் அந்தச் சாமியார் தான் தொண்டர்களின் கையில் முத்தமிட்டால் அவர்களுக்குக் கிருமி தொற்றாது என்று சொல்லி பலருக்கும் முத்தம் கொடுத்து வந்தார்.
கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றனர். அப்படி
வந்து சென்றவர்களில் யாரோ ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனா கிருமியைக் கொடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இதனால்
உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்றவர்கள் குறித்து சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபாவின் தொடர்பால் 24 பேர்
தொற்றுக்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை