பொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பின வாலிபரின் கழுத்தில் பொலிஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து, அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொலிஸாருக்கு எதிரான போராட்டங்களால், பல மாகாணங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொலிஸாரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப், நெருக்கடியான சூழலை எதிர் கொண்டு வரும் பொலிஸாரை ஊக்குவிக்கும் வகையில், பொலிஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான நிர்வாக உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி பொலிஸ் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து அற்கான நிர்வாக உத்தரவை ட்ரம்ப் நேற்று பிறப்பித்தார்.
இதுகுறித்து டிரம்ப் பேசுகையில்
“பொலிஸ் அதிகாரி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தவிர வேறு எந்த சமயத்திலும் கைதாகும் நபரின் கழுத்தை நெறிப்பது தடை செய்யப்படுகிறது. பொலிஸ் அதிகாரிகள் ஆபத்து குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து எனது அரசாங்கம் கவனித்து வருகிறது. அதேசமயம் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பும் மிகவும் அவசியம்“ எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை