பங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி வைப்பு
பங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐசிசி அறிவித்து உள்ளது.
பங்களாதேஷ் கிறிக்கெற் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக அணியின் இந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இதே போன்று ஒகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நியூஸிலாந்து, பங்களாதேஷில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பினால், இந்த தொடரை ஒத்தி வைப்பது என முடிவாகி உள்ளது.
இதுகுறித்து பங்களாதேஷ் கிறிக்கெற் சபைத் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி கூறியதாவது: கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள இந்த சூழ்நிலையில், வரும் ஓகஸ்டில் கிறிக்கெற் தொடருக்கு தயாராகி போட்டியை நடத்துவது என்பது சவாலானது.
வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அணி சார்ந்த நபர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பங்களாதேஷ் கிறிக்கெற் சபை, நியூஸிலாந்து கிறிக்கெற் சபை ஆகியவை போட்டி தொடரை ஒத்தி வைப்பது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை