துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதால் அதற்கான முன் ஏற்பாடாக கிருமி நீக்க பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்றாகும். சுமார் 7 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டமைப்பில் இயங்கும் இந்த விமான நிலையத்தில் 140-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் விமானங்களை இயக்கி வருகிறது.
இதுவரை இந்த விமான நிலையத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதை தொடர்ந்து விமான சேவைகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. தற்போது மீட்பு பணி விமானங்களுடன் ஒரு சில பயணிகள் விமானங்களும் இயக்கப்பட தொடங்கியுள்ளது.
அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் அனைத்து நாடுகளுக்குமான பன்னாட்டு விமான சேவைகள் புத்துயிர் பெற உள்ளது. இதனை அடுத்து தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்களில் உச்சகட்ட கிருமி நீக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை