சுலைமானி கொலை: உளவாளிக்கு மரண தண்டனை
ஈரானில் சுலைமானி
கொலை சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண
தண்டனை அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் குர்து
படை கமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி டெஹ்ரான் விமான நிலையத்தில்
ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில்
அவர் பலியானார். இது ஈரான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை
கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஜனவரி 8 ல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஆனாலும்இ பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இந்நிலையில் குவாசிம்
சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ. , இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கிய தகவல்களை
கொடுத்ததற்கு மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் பொலிஸ் கைது செய்தது. விசாரணையில்
சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து
மக்மூத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை
செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை