தந்தையானார் பாண்டியா
இந்திய கிறிக்கெற் அணியின் ஆல்-ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்திக் பாண்டியா. இவரும், மாடல் அழகியான நடாஷா ஸ்டான்கோவிச்சும் நீண்ட காலமாக பழகி வந்தனர். பின்னர், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக, கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
கொரோனா வைரஸால் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒரே வீட்டில்தான் இருந்தனர். அப்போது, பாண்டியா- நடாஷா ஜோடிக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர், எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருப்பதாகவும், உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் புதிய பரிணாமத்திற்கு செல்ல காத்திருப்பதாக கூறியிருந்தார். அவருக்கு கிறிக்கெற் ட் வீரர்கள், பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை